அருப்புக்கோட்டை: மதுரை -துாத்துக்குடி பைபாஸ் ரோடு அருப்புக்கோட்டை காந்தி நகரில் உள்ள ஷீரடி சாய்பாபா கோயிலில், கடந்த மாதம் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று மண்டலாபிஷேகம் நடந்தது. காலை 9 மணிக்கு விநாயகர் வழிபாடு, மஹா சங்கல்பம், புண்யாகவசனம், பஞ்கவயம், கும்ப பூஜை, த்ரவ்யாஹூதி, பூர்ணாஹூதி, மகா அபிஷேகம் நடந்தன. சாய்நாதருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. மதியம் 12 மணிக்கு பாபா ஆரத்தி, சிறப்பு அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை ஷீரடி சாய்பாபா சாரிடபிள் டிரஸ்ட் நிர்வாகத்தினர் செய்தனர்.