ராமேஸ்வரம்: தங்கச்சிமடம் சந்தியாகப்பர் சர்ச் 475ம் ஆண்டு திருவிழா யொட்டி, நேற்று விழா கொடி ஏற்றப்பட்டது. தங்கச்சிமடம் வேர்க்காடு கிராமத்திலுள்ள துாய சந்தியாகப்பர் ஆலய விழாவுக்கு ராமநாதபுரம், மதுரை, துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் வருவர்.இந்த சர்ச் முன்புற கட்டடத்தில் மும்மதத்தினரை குறிக்கும் அடையாள சின்னங்கள் இடம் பெற்றிருக்கும். இத்தலத்தின் திருவிழா யொட்டி நேற்று மாலை, சர்ச் வளாகத்தில் விழா கொடியை மதுரை பாதிரியார் ஆனந்த் ஏற்றி வைத்தார். இதன் பின் சிறப்பு திருப்பலி பூஜை நடந்தது. இன்று(ஜூலை17) முதல் தொடர்ந்து 9 நாட்கள் சர்ச் வளாகத்தில் நவநாள் திருப்பலி சிறப்பு பூஜை நடக்கும். ஏற்பாடுகளை விழா குழு தலைவர் அந்தோணிசந்தியாகு, நிர்வாகிகள் அந்தோணிராஜ், அருள்தாஸ் செய்து வருகின்றனர்.