சிறைமீட்ட நிறைகுளத்து அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜூலை 2017 12:07
சாயல்குடி;சாயல்குடி சிறைமீட்ட நிறைகுளத்து அய்யனார் கோயிலில் வருடாந்திர புரவி எடுப்பு நடந்தது. முத்து மீட்ட அய்யனார், வன்னியராய சுவாமி, கருப்பசுவாமி ஆகியோருக்கு அபிஷேக ஆராதனைகளுடன் மழை பெய்ய வேண்டி சிறப்பு பூஜை நடந்தது. மண்ணால் செய்யப்பட்ட 3 முதல் 4 அடி வரையிலான வண்ணம் தீட்டப்பட்ட குதிரைகளை நேர்த்திக்கடன் பக்தர்கள் தலையில் சுமந்து சென்றனர். சாயல்குடி ஜமீன்தார் சிவஞானபாண்டியன் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். நகரின் முக்கிய வீதிவழியாக கொண்டு செல்லப்பட்டு, சாயல்குடி கண்மாயில் கரைப்பு நிகழ்ச்சி நடந்தது. பகலில் அன்னதானமும், இரவு 7:00 மணியளவில் பொங்கல் பானை ஊர்வலம், ஆன்மிக சொற்பொழிவு உள்ளிட்டவை நடந்தது.