பெருந்துறை: ஈரோடு மாவட்டம், பெருந்துறை தாலுகா, வடமுகம் வெள்ளோடு கிராமம், குட்டப்பாளையம், கரையம்மன் கோவில் பொங்கல் விழா நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம், காவிரி தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. நேற்று காலை, மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. அதைத்தொடர்ந்து கரையம்மனுக்கு பொங்கல் வைத்து, சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.