பதிவு செய்த நாள்
17
ஜூலை
2017
01:07
குளித்தலை: கன்னிமார்பாளையம் மாரியம்மன் கோவிலில், கும்பாபி?ஷக விழா கோலாகலமாக நடந்தது. குளித்தலை அடுத்த, கன்னிமார்பாளையம் கணபதி, முருகன், மகா காளியம்மன், மகாமாரியம்மன், கருப்பண்ணசாமி, பாம்பலம்மன், நவக்கிரகங்கள் மற்றும் பரிவார சுவாமிகளுக்கான கும்பாபிஷேக விழா, கடந்த சில நாட்களுக்கு முன் துவங்கியது. குளித்தலை காவிரி ஆற்றில் இருந்து, பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வந்து, சிறப்பு அபிஷேகம் செய்தனர். முன்னதாக விக்னேஷ்வர் பூஜை, வாஸ்து சாந்தி, அஷ்டபந்தன மருந்து சாத்துதல், திராவியகுதி, தீபாராதனை, யாத்ராதானம், கடம் புறப்பாடு, கும்பாபி ?ஷகம் ஆகியன நடந்தன. விழா ஏற்பாடுகளை, ஊர்மக்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர். தோகைமலை, நாகனூர், கழுகூர், கொசூர், தொண்டமாங்கிணம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.