பதிவு செய்த நாள்
17
ஜூலை
2017
01:07
மோகனூர்: வாழவந்தியில் உள்ள, பழமையான புன்னைவன நாதீஸ்வரர் கோவில் புனரமைப்பு பணி, சிறப்பு யாகத்துடன் துவங்கியது. நாமக்கல் மாவட்டம், மோகனூர் அடுத்த எஸ்.வாழவந்தியில், பிரசித்தி பெற்ற புன்னைவன நாதீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு சுவாமி, அழகு அன்னபூரணியுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பழமையான இக்கோவில், பராமரிப்பு இன்றி சிதிலமடைந்தது. இக்கோவிலில், தினமும் காலை ஒரு கால பூஜை நடத்தப்படுகிறது. மேலும், பிரதோஷம், சிவ ராத்திரி, திருவாதிரை, பவுர்ணமி பூஜை அன்றும், சிறப்பு அபி?ஷகம், ஆராதனை நடக்கிறது. சிதிலமடைந்துள்ள, இக்கோவிலை புனரமைக்க வேண்டும் என்பது, அப்பகுதி பக்தர்கள் மற்றும் ஆன்மிக அன்பர்களின் பல ஆண்டு கோரிக்கை. இந்நிலையில், சேலத்தை சேர்ந்த ஒரு பக்தர், தனது குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்புடன், கோவிலை புனரமைக்க முடிவு செய்தார். அதற்கான சிறப்பு யாகம் நேற்று நடந்தது. யாகத்தில் வைத்த புனித நீரை கொண்டு, விநாயகர், புன்னைவர நாதீஸ்வரர், அழகு அன்னபூரணி ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபி ?ஷகம், ஆராதனை நடந்தது.