பதிவு செய்த நாள்
18
ஜூலை
2017
12:07
கொளத்தூர்: கல்யாண ரங்கநாத பெருமாள் கோவிலில் அன்னக்கூடை உற்சவம் சிறப்பாக நடந்தது. திருப்போரூர் ஒன்றியம், கேளம்பாக்கம் அருகே உள்ள கொளத்தூரில், கல்யாண ரங்கநாத பெருமாள் கோவில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இக்கோவிலில், ரங்கநாத பெருமாள் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இங்கு, ஆண்டுதோறும் நடைபெறும் அன்னக்கூடை உற்சவம் நேற்று நடைபெற்றது. இதில், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய உற்சவர் ரங்கநாத பெருமாளின் முன், இனிப்பு வகைகள், பழங்கள், சாதம், சாம்பார், ரசம், வடை உள்ளிட்ட அன்னங்கள் படையல் இடப்பட்டன. பின், சுவாமிக்கு சிறப்பு தீபாராதனைகள் செய்யப்பட்டன. உற்சவத்தில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, பெருமாளை வழிபட்டனர். இறுதியில், படையலிடப்பட்ட அன்னங்கள், பக்தர்களுக்கு பிரசாதமாக வினியோகம் செய்யப்பட்டன.