நாகர்கோவில்: ஆடி செவ்வாயை முன்னிட்டு அவ்வையார் அம்மனுக்கு பெண்கள் கொழுக்கட்டை படைத்து வழிபாடு நடத்தினர். தமிழ் புலவர் அவ்வையாருக்கு கன்னியாகுமரி மாவட்டம் தாழக்குடி அருகே கோயில் உள்ளது. ஆடிமாதம் செவ்வாய் கிழமைகளில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேவி கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.
அந்த வகையில் ஆடி மாதம் முதல் செவ்வாய் கிழமையை ஒட்டி, அவ்வையார் அம்மன் கோயிலில் பெண்கள் குவிந்தனர். அவர்கள் விதம் விதமான கொழுக்கட்டைகள் வேக வைத்து அம்மனுக்கு படைத்தனர். பாயாசமும் படைக்கப்பட்டது. பெண்கள் நீண்ட கியூவில் நின்று சுவாமி கும்பிட்டனர். இதுபோல மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் உள்ளிட்ட பல தேவி கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.