பதிவு செய்த நாள்
19
ஜூலை
2017
02:07
சென்னை : வடபழனி முருகன் கோயிலில் ஆடிக் கிருத்திகை திருவிழா கோலாகலமாக நடந்தது. பல்வேறு காவடி எடுத்தும், அலகு குத்தியும், தீபம் ஏற்றியும் பக்தர்கள் முருகனை தரிசித்தனர்.
முருகனை, கார்த்திகை பெண்கள் வளர்த்ததால், மாதந்தோறும் வரும் கார்த்திகை நட்சத்திர நாளன்று முருகனை பக்தர்கள் தரிசிப்பது சிறப்பு. அந்த வகையில் ஆடி மாதம் வரும் கார்த்திகை நட்சத்திர நாள், ஆடிக்கிருத்திகை விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. வடபழனி முருகன் கோவிலில், ஆடித்திருவிழா கோலாகலமாக நடந்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து பக்தர்கள் அதிகளவில் வந்தனர். அதிகாலை 4 மணி முதல் பக்தர்கள் வரத் தொடங்கிய, நிலையில் காலை 8 மணிக்கு மேல் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கத் துவங்கியது. பால் காவடி, புஷ்ப காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் அதிகளவில் வந்திருந்தனர். பக்தர்களில் பலர் மொட்டை அடித்தும், தீபம் ஏற்றியும் முருகனுக்கு காணிக்கை செலுத்தினர். விழாவில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பகதர்களுக்கு அருள்பாலித்தார்.