பதிவு செய்த நாள்
20
ஜூலை
2017
12:07
நாமக்கல்: ஆடி கிருத்திகையை முன்னிட்டு, முருகன் கோவில்களில், சிறப்பு அபிஷேகம் நடந்தது. நாமக்கல் - மோகனூர் சாலை, காந்தி நகரில் பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது. இங்கு, ஆடி கிருத்திகையை முன்னிட்டு, நேற்று, 108 சங்கு அபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு, கணபதி மற்றும் சுப்பிரமணியர் ஹோமத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. காலை, சுவாமிக்கு, 108 சங்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின், சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, மகா தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில், சந்தன காப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
* நாமக்கல், கடைவீதியில் உள்ள சக்தி விநாயகர் கோவில், பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு, பல்வேறு அபி?ஷகங்கள் செய்து சிறப்பு அலங்காரம் நடந்தது.
* கபிலர்மலை, பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. ப.வேலூர், பரமத்தி, குமாரபாளையம், பள்ளிபாளையம், ராசிபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில், முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.