Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குச்சனூரில் ஆடி சனிவார திருவிழா ... ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வார் மங்களா சாசனம் ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
27ல் ராகு பெயர்ச்சி விழா: திருநாகேஸ்வரத்தில் வரும் 31ல் லட்சார்ச்சனை
எழுத்தின் அளவு:
27ல் ராகு பெயர்ச்சி விழா: திருநாகேஸ்வரத்தில் வரும் 31ல் லட்சார்ச்சனை

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2017
10:07

மயிலாடுதுறை: திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோவிலில், 27ம் தேதி ராகு பெயர்ச்சி விழா நடக்கிறது. பரிகார ராசிக்காரர்களுக்கான லட்சார்ச்சனை, 31ம் தேதி முதல் ஆக., 3 வரை நடக்கிறது. தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அடுத்த திருநாகேஸ்வரத்தில், நாகநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், நவ கிரகங்களில் சாயாக்கிரகம் என்றழைக்கப்படும், ராகு பகவான் தனி சன்னதியில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.ராகு பகவான், ஒன்றரை ஆண்டுக்கு ஒரு முறை, பின்னோக்கி பெயர்ச்சி அடைவார். அதன்படி, வரும், 27ம் தேதி பகல், 12:48 மணிக்கு, சிம்ம ராசியில் இருந்து, கடக ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார் இதனால், மேஷம், மிதுனம், கடகம், சிம்மம், துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், மீனம் ஆகிய ராசிகள் பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகளாக கணிக்கப்பட்டுள்ளன.

ராகு பெயர்ச்சியை முன்னிட்டு, நாகநாத சுவாமி கோவிலில், 31ம் தேதி துவங்கி, ஆக., 3 வரை லட்சார்ச்சனை நடக்கிறது. பரிகாரம் செய்ய வேண்டிய ராசிக்காரர்கள், 200 ரூபாய் செலுத்தி, லட்சார்ச்சனையில் கலந்து கொள்ளலாம். மேலும், ’ஆணையர், செயல் அலுவலர்-, நாகநாத சுவாமி திருக்கோவில், திருநாகேஸ்வரம்,- கும்பகோணம் தாலுகா,- தஞ்சாவூர் மாவட்டம்’ என்ற முகவரிக்கு, மணியார்டர் செலுத்தி, லட்சார்ச்சனையில் பங்கு பெறலாம். பணம் செலுத்தி, நேரில் வர முடியாதவர்களுக்கு, விபூதி, குங்கும பிரசாதம், தபாலில் அனுப்பப்படும். இத்தகவலை கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி, விநாயகருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
கூரம்: கூரம் கிராமத்தில் உள்ள கூரத்தாழ்வான் கோவிலில் இன்று தேரோட்டம் விமரிசையாக நடந்தது.காஞ்சிபுரம் ... மேலும்
 
temple news
விருதுநகர்; திருச்சுழி அருகே ஸ்ரீ ராமதேவர் சித்தர் பீடத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா ... மேலும்
 
temple news
கோவை;  காரமடை அருகேயுள்ள படியனூர் கிராமத்தில் மிகப் பழமை வாய்ந்த அருள்மிகு பழநி ஆண்டவர் ... மேலும்
 
temple news
கம்பம்; காமயகவுண்டன்பட்டி ஸ்ரீ சுபத்ரா காளியம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி ஆயிரத்தெட்டு விளக்கு பூஜை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar