கவலைப்பட்டு என்னாகப் போகிறது! இதனால் உடல் நலம் தான் கெடும். உலகத்தில் எல்லோருமே கவலையில்லாமல் இருப்பது போலவும், தான் ஒருவன் மட்டும் தான் கவலையில் வாடுவது போலவும் சிலர் எண்ணுகிறார்கள். ஆண்டவரையும் சாடுகிறார்கள். ஒரு நோயாளிக்கு நோயின் கொடுமை அதிகமாக இருந்தது. “கர்த்தரே! எனக்கேன் இந்த நோயைக் கொடுத்தீர், தாங்க முடியவில்லையே, என்று சொல்லி அரற்றிக் கொண்டே இருந்தார். ஒருநாள் தன் பக்கத்தில் படுத்திருந்த நோயாளி சிகிச்சைக்கு பணமின்றி இறந்ததைப் பார்த்தார். கர்த்தர் தன்னை அப்படி வைக்காமல், பணத்தைக் கொடுத்துள்ளதை எண்ணி ஆறுதல் அடைந்தார். இனி தனக்கு வரும் வேதனைகளை மறந்து விட்டு, கடவுள் தந்த நல்லவற்றிற்காக அவருக்கு நன்றி சொல்ல வேண்டுமென முடிவெடுத்தார். இதற்குப் பரிசாக கடவுள் நோயை கொஞ்சம் கொஞ்சமாய் குறைத்து குணமாக்கி விட்டார். நீங்கள் வேதனைகளை மறந்து விடுங்கள். கடவுள் தந்த நல்லவற்றை மட்டும் எண்ணி மகிழ்ச்சியடையுங்கள். “மனமகிழ்ச்சி நல்ல ஔஷதம் (மருந்து) என்கிறது பைபிள்.