கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மஹா சக்தி மாரியம்மன் கோவிலில் ஆடிப்பூர திருவிழா, வரும், 28 வரை நடக்கிறது. இதில், நேற்று பால்குட ஊர்வலம் நடந்தது. இன்று, அம்மனுக்கு கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை மாவிளக்கு ஊர்வலம் நடக்கிறது. பின், அம்மன் நகர்வலம் நடக்கிறது. வரும், 27 மதியம், 12:30 மணிக்கு, ராகு - கேது பெயர்ச்சி சிறப்பு பரிகார யாக பூஜை நடக்கிறது. 28 மாலை, 5:00 மணிக்கு சுவாமிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.