Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஏர்வாடியில் சந்தனக்கூடு ... ஆடித் திருக்கல்யாணம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தேரோட்டம் ஆடித் திருக்கல்யாணம்: ராமேஸ்வரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பனிமய மாதா ஆலய விழா நாளை துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2017
01:07

துாத்துக்குடி: துாத்துக்குடி தூய பனிமய மாதா ஆலய திருவிழா நாளை (26ம் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. துாத்துக்குடி, துாய பனிமய மாதா ஆலய விழா நாளை துவங்கி ஆக.5-ம் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி இன்று மாலை கொடி பவனி நடக்கிறது. நாளை 26ம் தேதி காலை 8:30 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. முன்னதாக துாத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் கூட்டுத் திருப்பலி நடக்கிறது. மதியம் 12:00 மணி அளவில் அன்னைக்கு பொன் மகுடம் சூட்டப்படுகிறது. 5ம் நாள் திருவிழாவான, ஜூலை 30ம் தேதி காலை 7:30 மணிக்கு புதுநன்மை, கூட்டுத் திருப்பலி நடக்கிறது. காலை 11:00 மணிக்கு எர்ணாகுளம் பிஷப் ஜோஸ் புதின் தலைமையில் மலையாள திருப்பலி நடக்கிறது. மாலை 6:15 மணிக்கு நற்கருணை பவனி நடக்கிறது. ஆக., 4ம் தேதி இரவு 9:00 மணிக்கு அன்னையின் திருவுருவ பவனி நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான அன்னையின் பெருவிழா ஆக., 5ம் தேதி நடக்கிறது. அதிகாலை 5:00 மணிக்கு முதல் திருப்பலியும், 5:30மணிக்கு 2ம் திருப்பலியும், 7:30 மணிக்கு ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் பெருவிழா கூட்டுத்திருப்பலியும் நடக்கிறது. மதியம் 12:00 மணிக்கு திருச்சி மறைமாவட்ட ஆயர் அந்தோனி டிவோட்டா தலைமையில் சிறப்பு நன்றி திருப்பலி நடக்கிறது. மாலை 5:30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை குரு கிருபாகரன் தலைமையில் ஆடம்பர திருப்பலி நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு நகர வீதிகளில் அன்னையின் திருவுருவ பவனி நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70 வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மஹோத்சவம் ... மேலும்
 
temple news
காரைக்கால்: திருநள்ளாறு, குச்சனுார் சனீஸ்வரர் கோவிலில் நேற்று நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவில், ... மேலும்
 
temple news
கம்பம்; சனி பகவானை நினைத்து பயப்படத் தேவையில்லை. அவருக்கு பிடித்த நிறத்தை பயன்படுத்தினாலே அவரது ... மேலும்
 
temple news
பல்லடம்; நல்லது எது, கெட்டது எது என்பதை உணர்த்தவே சனிபகவான் நம்மை சோதிக்கிறார் என, பல்லடம் அருகில் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் சனி பெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar