தஞ்சாவூர் திருவையாறு வழியில் திருக்கண்டியூரிலிருந்து 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது வீரசிங்கம் பேட்டை. பொதுவாக மாரியம்மனின் சகோதரிகள் ஏழுபேர் என்பார்கள். அவர்களில் கடைசி தங்கையே வீரசிங்கம் பேட்டையில் வீற்றிருக்கும் இளமாரியம்மன். இப்பகுதி மக்களுக்கு எங்கு திருமணம் நடந்தாலும் இங்கு வந்து அம்மனை வழிபட்ட பின்னரே தங்கள் இல்வாழ்வைத் தொடங்குகின்றனர்.