ஆண்டாளின் அவதார தினமான ஆடிப்பூரத்தன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் தேர்த்திருவிழா நடைபெறுகிறது. இத்தேரில் சுமார் 1000 தேவ தேவியர், ரிஷிகள் ஆகியோரது உருவங்களும், ராமாயண மகாபாரதக் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. வடம்பிடிக்க 3000 பேர் தேவைப்படுவார்களாம். ஆடிப்பூர விழாவின் போது முதல் நாள் 16 கால்கள் கொண்ட சப்பரத் தேர் பவனி வரும். பனை ஓலை குருத்துகளால் செய்யப்படும் இந்த தேர்தரிசனம் பதினாறு பேறுகளை தரும் என்பது நம்பிக்கை. 7ம் நாளன்று ஆண்டாள் மடியில் ரங்கமன்னார் தலை வைத்து படுத்த நிலையில் கட்சி தருவார். 10ம் நாள் விழாவில் முத்துக்குளி நிகழ்ச்சியில் ஆண்டாளின் பிறந்தநாள் பலனைச் சொல்வார்கள்.