Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பண்ருட்டி திருவதிகை ... ஸ்ரீவில்லிபுத்தூர்  ஆண்டாள் சயனசேவை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சயனசேவை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தேரோட்டம்: ஸ்ரீவில்லிபுத்தூரில் போக்குவரத்து மாற்றம்
எழுத்தின் அளவு:
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தேரோட்டம்: ஸ்ரீவில்லிபுத்தூரில் போக்குவரத்து மாற்றம்

பதிவு செய்த நாள்

26 ஜூலை
2017
09:07

 ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் ஆடிப்பூரத்தேரோட்டம் நாளை (வியாழன்) காலை நடப்பதை முன்னிட்டு நகரில் போக்குவரத்து மாற்றமும், பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. கடந்த 19ந் தேதி அன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோயில் ஆடிப்பூரத்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் 9ம் திருநாளான நாளை  தேரோட்டம் நடக்கிறது. இதற்காக அதிகாலையில் ஏகாந்த திருமஞ்சனம் முடிந்து, பிரம்மமுகூர்த்தத்தில் திருத்தேருக்கு எழுந்தருளும்  ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. அதனையடுத்து சரியாக 8.05 மணிக்கு தேரினை வடம்பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் தமிழக அமைச்சர்கள், நீதிபதிகள், மக்கள்பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

தேரோட்டத்தை முன்னிட்டு ஸ்ரீரங்கம் பெருமாள் மற்றும் மதுரை கள்ளழகர் கோயில்களிலிருந்து ஆண்டாளுக்கு பரிவட்டங்கள் இன்று கொண்டுவரபட்டு சாற்றப்படுகிறது. விழா ஏற்பாடுகளை தக்கார் ரவிசந்திரன், செயல் அலுவலர்கள் ராமராஜா மற்றும் அறநிலையத்துறையினர் செய்துள்ளனர். விருதுநகர் எஸ்.பி.ராஜராஜன் உத்தரவின்பேரில், 6 டி.எஸ்.பி, 19 இன்ஸ்பெக்டர்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நகரின் அனைத்து பகுதிகளிலும் கேமிராக்கள் பொருத்தபட்டு கண்காணிக்கபடுகிறது.

போக்குவரத்து மாற்றம்; நாளை நடக்கவுள்ள தேரோட்டத்தை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூரில்  போக்குவரத்து மாற்றப்படவுள்ளது. இதன்படி மதுரை, தேனி, ஆகிய  நகரங்களிலிருந்து அழகாபுரி வழியாக வரும் வாகனங்கள் ராமகிருஷ்ணாபுரம், சர்ச் சந்திப்பு, கோர்ட், ரயில்வே ஸ்டேசன், தாலுகா ஆபிஸ் வழியாக ராஜபாளையம் செல்லவேண்டும். ராஜபாளையத்திலிருந்து புறப்பட்டு மதுரை, தேனி செல்லும் வாகனங்கள் மம்சாபுரம், ஆத்துக்கடை, காமராஜர் சிலை வழியாக மதுரை செல்லவேண்டும். சிவகாசியிலிருந்து வரும் வாகனங்கள் கோர்ட், ரயில்வே ஸ்டேசன், தாலுகா ஆபிஸ் வழியாக ராஜபாளையம் செல்ல வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழாவில் அம்மன் மஞ்சள் நீராட்டத்துடன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
காளஹஸ்தி;  திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு மகா சம்ஸ்தானம் சிருங்கேரி பீடாதிபதி ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் வடகரை பகவதியம்மன் கோயில் மாசித்திருவிழா நிறைவு நாளை முன்னிட்டு‌ ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar