Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராசிபுரம் பழனியப்பர் கோவில் ... சங்ககிரி ஓங்காளியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சேலம் கோட்டை மாரியம்மனுக்கு பூச்சாட்டுதல்: ஆக., 9 முதல் பொங்கல் வைபவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூலை
2017
02:07

சேலம்: சேலம், கோட்டை மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா, நேற்று பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், கூடை கூடையாய் பூக்களை அம்மனுக்கு சாத்தி, வழிபாடு நடத்தினர்.

சேலம் கோட்டை மாரியம்மன் கோவில், ஆடித்திருவிழா பிரசித்தி பெற்றது. இக்கோவிலில் ஆடித்திருவிழா தொடங்கிய பின்னரே, மற்ற மாரியம்மன் கோவில்களில் விழா நடத்துவது வழக்கம். கடந்த ஆண்டு, கோவில் திருப்பணி காரணமாக, கருவறையில் இருந்த அம்மன் பாலாலயம் செய்யப்பட்டது. தொடர்ந்து பணிகள் நடந்து வரும் வேளையில், திருவிழா நடப்பதே கேள்விக்குறியாக இருந்தது. பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க, எளிமையான முறையில் திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, திருவிழாவின் முதல் நிகழ்ச்சியான பூச்சாட்டுதல் வழிபாடு நேற்று நடந்தது. கிச்சிபாளையம் நடராஜர் பஜனை மடத்திலிருந்து, பக்தர்கள் பூக்களை கூடை கூடையாய் ஊர்வலமாக எடுத்து வந்தனர். பாலாலயம் செய்யப்பட்டிருந்த அம்மன் மீது, பூக்களை சாத்தி, வழிபாடு நடத்தினர். நூற்றுக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று, அம்மனை தரிசித்தனர். சேலம் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். வரும், ஆக.,7ல், சக்தி அழைப்பு, 9, 10, 11ல் பொங்கல் வைபவம், ஆக., 15ல் பால்குட விழா நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே ... மேலும்
 
temple news
திருப்பதி: கோலகலமாக நடைபெற்று வந்து பிரம்மோற்சவம் நேற்று நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து ... மேலும்
 
temple news
ஸ்ரீகாளஹஸ்தி; தென் கைலாசம் எனப் புகழ்பெற்ற  ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த 55.72 சவரன் (445.76 கிராம்) ... மேலும்
 
temple news
திருச்சி; கே.கே.நகரில் அருள்பாலிக்கும், அலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar