Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில் ... மதுராந்தகம் செல்லியம்மன் தேர் உலா கோலாகலம் மதுராந்தகம் செல்லியம்மன் தேர் உலா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பூர் கோயில்களில் ராகு, கேது பெயர்ச்சி: பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
திருப்பூர் கோயில்களில் ராகு, கேது பெயர்ச்சி: பக்தர்கள் வழிபாடு

பதிவு செய்த நாள்

28 ஜூலை
2017
11:07

திருப்பூர் : ராகு, கேது பெயர்ச்சி முன்னிட்டு, திருப்பூர், மண்ணரை ராஜகணபதி கோவிலில், சிறப்பு யாக பூஜை நேற்று நடந்தது. சிம்ம ராசியில் இருந்து கடக ராசிக்கு, ராகு பகவானும்; கும்ப ராசியில் இருந்து மகர ராசிக்கு, கேது பகவானும், நேற்று இடப்பெயர்ச்சியாகியுள்ளனர். ராகு, கேது பெயர்ச்சியை முன்னிட்டு, ஊத்துக்குளி ரோடு மண்ணரையில் உள்ள ராஜகணபதி கோவிலில், நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று காலை ராகு, கேது பெயர்ச்சி, யாக பூஜைகள் துவங்கின. சிவாச்சார்யார்கள், பல்வேறு மூலிகை பொருட்களை கொண்டு பூஜை நடத்தினர். தொடர்ந்து, ராகு, கேது மற்றும் நவக்கிரகங்ளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள்  நடந்தன. ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கும் பெயர்ச்சியாகும் நேரத்தில், அர்ச்சனை, மகா தீபாராதனை  நடந்தது.

ராகு, கேது பெயர்ச்சி பலன்கள் குறித்து, பண்டிட் அசோக்பாரதி விளக்கினார். இதற்கான ஏற்பாடுகளை, ராஜகணபதி கோவில் அறக்கட்டளை  நிர்வாகிகள் செய்திருந்தனர். பல்லடத்தை அடுத்த சிங்கனுõரில் உள்ள ஸ்ரீகொண்டத்து காளியம்மன் கோவிலில், ராகு, கேது பெயர்ச்சியையொட்டி, ராகு பகவானுக்கு சிறப்பு வழிபாடு, ஆராதனை நடைபெற்றது. ராகுவுக்காக நடத்தப்பட்ட பரிகார வேள்வியில், பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.  அதை தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் ராகு பகவான், தேவியர்களுடன் அருள்பாலித்தார். காங்கயம், பழையகோட்டை ரோடு, காசிவிஸ்வநாதர் கோவிலில், ராகு, கேது பெயர்ச்சியை முன்னிட்டு, சிறப்பு யாகம் மற்றும் பரிகார பூஜைகள் நடந்தன. சிறப்பு யாக பூஜை மற்றும் பரிகார பூஜைகள் நடத்தப்பட்டன. இதில், பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் தடம்பார்க்கும் நிகழ்வு நடைபெற்றது. இன்று வைகை ஆற்றில் மீண்டும் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
 சென்னை: மதுரையை தொடர்ந்து, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்குள், அனுமதியின்றி பெண் ஒருவர், சினிமா ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் ஸ்ரீ நடராஜப் பெருமான் தரிசன காட்சி ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் விடிய விடிய தசாவதார ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar