ஆதிஜெகநாதப்பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு ஆடிப்பூரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஜூலை 2017 12:07
கீழக்கரை, திருப்புல்லாணி ஆதிஜெகநாதப்பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு ஆடிப்பூர விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. காலை 10:00 மணிக்கும் ஆண்டாளுக்கும், கல்யாண ஜெகநாதப்பெருமாளுக்கும் விசேஷ திருமஞ்சனம், சாற்றுமுறை கோஷ்டி, பாராயணங்கள் நடந்தது கோயில் பட்டாச்சாரியார்களால் நாலாயிர திவ்யபிரபந்தப்பாடல்கள் பாடப்பட்டன. மாலை 6:00 மணிக்கு ஊஞ்சல் சேவை நடந்தது.
கமுதி: கமுதி குண்டாறு நதிக்கரை அருகே சக்தி அம்மன் கோயிலில் ஆடிப்பூரத்தை யொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.காலையில், யாகசாலை பூஜைகள், வளையல் அலங்காரம் நடந்தது. ராகு பெயர்ச்சியையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடந்தது. பூஜைகளை சுரேஷ் பட்டர் செய்தார். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி வீரபத்திரன் தலைமையில் பக்தர்கள் செய்திருந்தனர்.