மடப்புரம் பத்ர காளியம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜூலை 2017 11:07
திருப்புவனம்: திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ர காளியம்மன் கோயிலில் நேற்று ஆடி வெள்ளி கிழமையை முன்னிட்டு ஏராளமான பெண்கள் தரிசனம் செய்தனர்.
மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் ஆடி வெள்ளிகிழமை மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஆடி வெள்ளியன்று ஏராளமான பெண்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம். ஆடி வெள்ளியை முன்னிட்டு மதுரை, சிவகங்கையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. திருப்புவனம் இன்ஸ்பெக்டர் பிச்சை பாண்டியன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். கோயில் வளாகம் முழுவதும் கண்காணிப்பு கேமரா கொண்டு கண்காணிக்கப்பட்டது. உச்சி கால பூஜையின் போது பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஒரு மணிக்கு அம்மனுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பெண்கள் சாமியாடினர்.