உடுமலை: உடுமலை, சுற்றுவட்டார கோவில்களில் ஆடிவெள்ளியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. ஆடி இரண்டாம் வெள்ளியையொட்டி, உடுமலை மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. அம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம், மஞ்சள் உட்பட, 16 வகை யான பொருட்களால் அபிேஷகம் செய்யப்பட்டது. மலர் அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட் சியளித்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செ ய்தனர். பொதுமக்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக பக்தர்களுக்கு கூழ் ஊற்றினர். குறிஞ்சேரி ஆண்டாள் நாச்சியார் கோவிலில் அம்மனுக்கு, சந்தனம், தேன், திருநீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிேஷகம் செய்யப்பட்டது. மகா தீபாராதனை காட்டப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த ஆண்டாள் நாச்சியாரை பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் இன்னிசை குழு சார்பில் தேவாரம், திருவாசகம், பாராயணம் படிக்கப்பட்டது.