நூறாண்டு காலம் வாழ்க!- வாழ்த்துகிறார் வேதாத்ரி மகரிஷி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜூலை 2017 04:07
* மனத்தூய்மை, ஒழுங்கான உணவு, அளவான உழைப்பு, சீரான ஓய்வு என வாழ்வை அமைத்துக் கொண்டால் நோயின்றி நூறாண்டு காலம் வாழலாம். * மனதில் உறுதியும், ஒழுங்கும் உருவாகி விட்டால் நினைத்த செயல் எல்லாம் அப்படியே நிறைவேறும். * மனதை அடக்க நினைத்தால் அலையும். அதை அறிய நினைத்தால் அடங்கத் தொடங்கி விடும். * கோபம் வரும் போது உடலிலுள்ள ஜீவகாந்த சக்தி வேகமாக வெளியேறுகிறது. இதனால் உடல், மனம் பாதிக்கப்படுகிறது. * தேவையான நேரத்தில் பிறர் மீது கோபம் வருவது போல் நடிக்கலாம். ஆனால் மனதில் சிறு சலனம் கூட ஏற்படக்கூடாது. * திறமையின்மை, பயத்தால் மனக்கவலை அதிகரிக்கிறது. முறையான பயிற்சி, முயற்சி இருந்தால் திருத்திக் கொள்ள முடியும். * தீர்க்க முடியாத துன்பம் என்று உலகில் ஏதுமில்லை. இதை அறியாத மனிதர்களே துன்பத்தில் உழல்கிறார்கள். * தினமும் காலையில் எழுந்ததும் வாழ்க வளமுடன் என்று உலகம் முழுவதையும் மனதார நினைத்து வாழ்த்துங்கள். இதனால் எங்கும் மகிழ்ச்சியும், அமைதியும் பரவும்.