சென்னிமலை: சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை விழா, சென்னிமலையில் கொண்டாடப்பட்டது. சென்னிமலை கைலாசநாதர் கோவிலில், சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை விழா நேற்று நடந்தது. இதையொட்டி, 63 நாயன்மார்களுக்கும் விசேஷ அபிஷேகம், அலங்காரம் செய்து, பூஜைகள் நடந்தன. தொடர்ந்து சுந்தரமூர்த்தி நாயனார் உற்சவர் புறப்பாடு நடந்தது. விழாவுக்கு முன்னதாக, தேவார இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.