உளுந்தூர்பேட்டை சாரதா ஆசிரமத்தில் மழை வேண்டி முளைப்பாரி வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஜூலை 2017 02:07
உளுந்துார்பேட்டை: சாரதா ஆசிரமத்தில் மழை வேண்டியும், உலக நன்மைகாகவும் முளைப்பாரி மற்றும் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. உளுந்துார்பேட்டை சாரதா ஆசிரமத்தில் மழை வேண்டியும், உலக நன்மைகாகவும், குடும்பம் செழிக்கவும் முளைப்பாரி மற்றும் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. கடந்த 21ம் தேதி 150 கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் நெல் விதைத்து 9 நாட்கள் விரதம் இருந்து, 9ம் நாளான நேற்று முளைபாரியாக சாரதா ஆசிரமத்திற்கு ஊர்வலமாக கொண்டு வந்தனர். அங்கு சிறப்பு அலங்காரத்தில் சாரதா அம்பாள் பக்தர்களுக்குகாட்சியளித்தார். ஊர்வலமாக வந்திருந்த பெண்கள், ஆசிரமத்தில் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். நிகழ்ச்சியில் சாரதா ஆசிரம தலைமை மாதாஜி யத்தீஸ்வரி ராமகிருஷ்ண ப்ரியா அம்பா குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்து தீபாரதனை செய்தார். சிறப்பு விருந்தினராக பெங்களூரு குட்வீல் நிறுவன இயக்குநர்கள் ராஜேந்திரபிகாரி, கிருஷ்ணன், மைதிலிஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து சேவா பிரதிஷ்டான் இயக்குநர் யத்தீஸ்வரி ஆத்ம விகாச ப்ரியா அம்பா முளைப்பாரியினை பெண் பக்தர்களிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் பல்வேறு கிராமங்களிலிருந்து வந்திருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வழிப்பட்டனர்.