சிவகிரி: மழை வேண்டி, சிவகிரியில் சிறப்பு வழிபாடு நடந்தது.கொடுமுடி தாலுகா பகுதிகளில், வறட்சியால் குடிநீருக்கு கடும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வறட்சி நீங்கி, மழை வேண்டி, சிவகிரி ஜீவா தெருவில் உள்ள, ராமானந்தர் ஜீவ சமாதியில் சிறப்பு வழிபாடு நடந்தது. பால், தயிர், தேன், இளநீர், சந்தனம் முதலிய நறுமணப் பொருட்களால் அபிஷேகம் செய்து, மழை வேண்டி பதிகம் பாடி, மக்கள் வழிபட்டனர்.