சிதம்பரம் மாரியம்மன் கோவில் திருவிழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஆக 2017 01:08
சிதம்பரம்: சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோவில் தீமிதி உற்சவத்தையொட்டி ஆயிரக்கனக்கான பக்தர்கள் அலகு குத்தியும், செடல்போட்டு நேர்த்திக் கடன் செலுத்தினர். சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோவில் ஆடி பிரம்மோற்சவம் கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி தினசரி சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. முக்கிய விழாவான தீமிதி உற்சவத்தையொட்டி நேற்று அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்தும், தொட்டில் கட்டி இழுத்தும், அலகு குத்தி கோவில் வலம் வந்தனர். பெண்கள் பூஜை செய்தனர். காலை ஏராளமான பக்தர்கள் காவடி, விமானக் காவடி எடுத்த நேர்த்திக் கடன் செலுத்தினர். கோவிலில் அதிகாலை முதல் பக்கள் கூட்டம் அலைமோதியதால், ஏ.எஸ்.பி., நிஷா தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.