கடலூர்: கடலூர் வரதராஜப் பெருமாள் கோவிலில் நேற்று கருட ஜெயந்தி உற்சவம் நடந்திது. கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வரதராஜப் பெருமாள் கோவிலில் கருட ஜெயந்தி உற்சவம் நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு காலை 7:00 மணிக்கு வேதபாராயணம், 10:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப் பெருமாளுக்கும், கருடாழ்வாருக் கும் திருமஞ்சனம் நடந்தது. இரவு 7:00 மணிக்கு கருட சகஸ்கர நாமாவளி அர்ச்சனை நடந்தது.