பதிவு செய்த நாள்
05
ஆக
2017
12:08
ஆடிவெள்ளி, வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு, பழநி மாரியம்மன்கோயில், பெரியநாயகியம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள் சிறப்பு வழிபாடுசெய்தனர்.
பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. மாலை 6.30 மணிக்கு மீனாட்சி அலங்காரம் செய்யப்பட்டு மலர்களால் லட்சார்ச்சனை நடந்தது. இதேபோல மாரியம்மன்கோயிலிலும் சிறப்புபூஜைகள் நடந்தது.
திருஆவினன்குடி கோயில் துர்க்கையம்மன் தெற்குகிரிவீதி காளிகாம்பாள் கோயில், ரயில்வே காலனி முத்துமாரியம்மன் கோயில், புதுதாராபுரம் ரோடு ரெணகாளியம்மன்கோயில், நேதாஜிநகர் காமாட்சி ஏகாம்பரேஸ்வரர் கோயில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், லட்சார்ச்சனை பூஜைகள், திருவிளக்குபூஜை நடந்தது. விஷ்ணு துர்க்கைக்கு வளையல்களால் சிறப்புஅலங்காரம்செய்திருந்தனர்.
கொடைக்கானல்: இங்கு காலை முதலே மூஞ்சிக்கல் பெரிய மாரியம்மன், அண்ணாநகர் சின்ன மாரியம்மன், டோபிகானா பெரிய காளியம்மன் கோயில்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.
சின்னாளபட்டி: சின்னாளபட்டி அருகே கரியன்குளக்கரையில் தேவி கருமாரியம்மன் கோயில் உள்ளது. மண்பானையில் ஊற வைக்கப்பட்ட கூழ், வேப்பிலை சுற்றிய 9 கலயங்களில் நிரப்பப்பட்டது. இக்கலையங்களுடன் 3 முறை கோயிலை வலம் வந்தபின், நாகர் சன்னதியில் வழிபாடு நடந்தது. பின்னர், கருவறைக்கு கலயங்கள் அழைப்பு நடந்தது. சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு கூழ் வழங்கப்பட்டது.