பதிவு செய்த நாள்
05
ஆக
2017
02:08
திருத்தணி:படவேட்டம்மன் கோவிலில், நடந்த 2ம் ஆண்டு விழாவில், 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி தீமிதித்தனர்.திருத்தணி ஒன்றியம், சூர்யநகரம் ஊராட்சிக்குட்பட்ட ராமாபுரம் கிராமத்தில், படவேட்டம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆடி மாத வெள்ளி மற்றும் வரலட்சுமி விரதத்தையொட்டி, இரண்டாம் ஆண்டு விழா நடந்தது.காலையில், படவேட்டம்மன் கோவில் வளாகத்தில் கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, காலை, 10:00 மணிக்கு, மூலவருக்கு பாலாபிஷேகம், சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை, 3:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை, கோவில் வளாகத்தில் திரளான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.மாலை, 6:30 மணிக்கு, 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து, அக்னி குண்டத்தில் இறங்கி தீமிதித்தனர். இரவு, 7:30 மணிக்கு, உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வாண வேடிக்கைகளுடன் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.