பதிவு செய்த நாள்
05
ஆக
2017
02:08
விக்கிரவாண்டி: முண்டியம்பாக்கம் அஷ்டபுஜ துர்க்கையம்மன் கோவிலில் ஆடிப்பூர உற்சவம் நடந்தது.
விக்கிரவாண்டி அடுத்த முண்டியம்பாக்கம் அஷ்டபுஜ துர்க்கையம்மன் கோவிலில், ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு துர்க்கையம்மனுக்கு, கோபூஜை நடந்தது. முண்டீஸ்வரர் கோவிலிலிருந்து பக்தர்கள், முருகன் கோவில் தர்மகர்த்தா சக்திவேலு தலைமையில், 108 பால் குடங்களுடன் மாட வீதிவழியாக ஊர்வலம் வந்தனர். பின், துர்க்கையம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர் .
தொடர்ந்து அஷ்ட புஜ துர்க்கையம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். அபிஷேகம் மற்றும் பூஜைகளை, முண்டியம்பாக்கம் பாபு குருக்கள் செய்திருந்தார்.
விழா ஏற்பாடுகளை முன்னாள் ஊராட்சி தலைவர்கள் கருணாகரன், சாந்தி கருணாகரன், ஜோதிடர் கமலக்கண்ணன், ராமலிங்கம் , குமாரசாமி, கலையரசி, வீரபாண்டி ஆகியோர் செய்திருந்தனர்.