மரக்காணம்: மரக்காணம் அடுத்த நகர் கிராமத்தில் காளியம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது. விழாவையொட்டி காலை 8.00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. இதையடுத்து பூங்கரகம் வீதியுலாவும், பகல் 12:00 மணிக்கு, காளியம்மன் தேர் இழுத்தல் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து மயானத்தில் காளியம்மன், வள்ளாலகண்டனை அழித்தல் நிகழ்ச்சி நடந்தது. இரவு அம்மன் பூ அலங்காரத்தில் அருள்பாலித்தார்.