பதிவு செய்த நாள்
05
ஆக
2017 
02:08
 
 ப.வேலூர்: ப.வேலூர் அடுத்த, நன்செய் இடையாறு அக்னி மாரியம்மன் கோவிலில், ஆடி மாதத்தினை சிறப்பிக்கும் வகையில், குத்துவிளக்கு பூஜை, அம்மனுக்கு பாலாபிஷேகம்,சிறப்பு அலங்காரம் மற்றும் ஆராதனைகள் நடப்பது வழக்கம்.  காலை, மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் காவிரிக்கு சென்று புனித நீராடி தீர்த்தம் எடுத்து வந்தனர். அம்மன் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில், ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின், அம்மனுக்கு, 10 ஆயிரத்து எட்டு, பால்குட அபிஷேகம் நடந்தது. 1,008 குத்துவிளக்கு பூஜையில், ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.
* ப.வேலூர், சுல்தான்பேட்டை பகவதியம்மன் கோவிலில், அம்மனுக்கு குத்துவிளக்கு பூஜை செய்து, வழிபட்டனர். தொடர்ந்து, அபிஷேக ஆராதனைகள் நடந்தன. அதேபோல, பாண்டமங்கலம் அடுத்த, கோப்பணம்பாளையம் மாசாணியம்மன் கோவிலில், குத்துவிளக்கு பூஜையில் பெண்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை அந்தந்த கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.