Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news 5 ஆயிரம் பெண்கள் கஞ்சிக்கலய ஊர்வலம் சந்திரகிரகணம்: ஸ்ரீவி., ஆண்டாள் கோயில் நடையடைப்பு நேரம் மாற்றம் சந்திரகிரகணம்: ஸ்ரீவி., ஆண்டாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புன்னைநல்லூர் அம்மனுக்கு 7 டன் மலர்களால் அலங்காரம்
எழுத்தின் அளவு:
புன்னைநல்லூர் அம்மனுக்கு 7 டன் மலர்களால் அலங்காரம்

பதிவு செய்த நாள்

07 ஆக
2017
01:08

தஞ்சாவூர்: தஞ்சை, புன்னைநல்லூர் முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு, 7 டன் மலர்களால், அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தஞ்சாவூர் காவல் தெய்வமாக விளங்கும், புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு, ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம், மூன்றாவது வெள்ளிக்கிழமை பூச்சொரிதல் விழா நடத்தப்படும்.

இந்த ஆண்டு பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம், பல்வேறு ஊர்களில் உள்ள பக்தர்களிடம் பெறப்பட்ட, 15 வகையான மலர்களுடன், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ரதங்கள் புறப்பட்டன. ரதங்கள் அனைத்தும், நேற்று முன்தினம் இரவு, தஞ்சை பெரிய கோவில் முன் நிறுத்தப்பட்டன. விநாயகர், அம்மன், முருகன் ஆகிய தெய்வங்கள் அலங்கரிக்கப்பட்டு, ரதத்தில் எழுந்தருளி, ஒன்றன் பின் ஒன்றாக புறப்பட்டன. தஞ்சை நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற ரதங்கள், நேற்று மதியம், புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலை அடைந்தன. ரதங்களில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட பூக்களை, பக்தர்கள் கூடைகளில் எடுத்து சென்று, அம்மனுக்கு செலுத்தி வழிபட்டனர். மொத்தம், 7 டன் பூக்களால், அம்மன் அலங்கரிக்கப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோத்தகிரி: -கோத்தகிரி அருகே அமைந்துள்ள ஒன்னதலை ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா, நேற்று சிறப்பாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி அருகே அமைந்துள்ள திம்பட்டி எட்டூர் உச்சகாளியம்மன் கோவிலில், மகா கு ம்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அங்காளம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது.ஸ்ரீமுஷ்ணம் சந்தை தோப்பு அருகே உள்ள ... மேலும்
 
temple news
கடலுார்: திருவந்திபுரம் கிடாம்பி ஆச்சான் கோவிலில் சீனுவாச பெருமாளுக்கு திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
கடலுார்: பாடலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar