Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சங்கரன்கோவிலில் ஆடித்தபசு கோலாகலம் மழை வேண்டி சிறப்பு யாகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குச்சனூர் மூலவருக்கு மஞ்சள் காப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஆக
2017
02:08

சின்னமனுார்: குச்சனுார் சனீஸ்வரர் கோயில் மூலவருக்கு மஞ்சள் காப்பு சாத்தப்பட்டது. சோணை கருப்பசாமிக்கு மது படையல் ஆக., 14ல் நடக்கிறது.தேனிமாவட்டம் குச்சனுார் சனீஸ்வரர் கோயில் ஆடி சனிவார விழா ஜூலை 22ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. மூலவர் சுயம்பு என்பதால், அவருக்கு அனுகிரக மூர்த்தியாக உருவம் கொடுக்க மூலிகை கலந்த மஞ்சள் காப்பு சாத்தப்படும். ஆண்டு முழுவதும் நல்லெண்ணெய் பூசி பாதுகாக்கப்படும். இந்த அலங்காரம் மூன்றாவது ஆடி சனிவார விழா நிறைவடைந்து நடை அடைத்த பின் களையப்பட்டு, புதிதாக மஞ்சள் காப்பு சாத்தப்படும்.இந்தாண்டு நேற்று முன்தினம் சனிவார விழா நிறைவடைந்த பின் தலைமை அர்ச்சகர் திருமலைஜெயபால் முத்து, உதவி அர்ச்சகர்கள் சிவக்குமார், கோபிநாத், முத்துக்கண்ணன் கொண்ட குழுவினர் இரவு முழுவதும் மஞ்சள் காப்பு சாத்தும் பணியில் ஈடுபட்டனர். இதற்காக மூலிகை, படிகாரம், மஞ்சள், நல்லெண்ணெய் கலந்த கலவை கடந்த 20 நாட்களுக்கு முன்பே தயார் நிலையில் வைக்கப்பட்டது.

மது படையல் : ஆக., 14ல் கோயில் வளாகத்தில் உள்ள சோணை கருப்பசாமிக்கு மது படையல் வைத்து, பக்தர்களுக்கு கறி விருந்து வழங்கப்படும். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் வழங்கும் மது பாட்டில்களை அறநிலையத்துறையினர் சேகரித்து இரவு பூஜைக்கு வழங்குவர். உபயதாரர்கள் வழங்கும் ஆடு, கோழிகளை சமைத்து கறி விருந்து நடக்கும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி மகா யாகம் ... மேலும்
 
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar