Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news அழகர்கோவில் ஆடித் தேரோட்டம் : ... பரமக்குடியில் ஆடித்தேரோட்டம்: கோவிந்தா கோஷத்துடன் வீதிவலம் பரமக்குடியில் ஆடித்தேரோட்டம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாலக்கோட்டுக்கு அருகே பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
பாலக்கோட்டுக்கு அருகே பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

08 ஆக
2017
11:08

தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டுக்கு அருகே உள்ள, முத்துராயன் குட்டை மலைப்பகுதியில், பாறை ஓவியங்கள், பானை ஓடுகள் உள்ளிட்ட தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. கிருஷ்ணகிரி மாவட்ட, அறம் வரலாற்று ஆய்வு மையம் சார்பில், முத்துராயன் குண்டு மலைப்பகுதியில், சமீபத்தில், கள ஆய்வு நடந்தது. அதில், பெருங்கற்காலத்தைச் சேர்ந்த பல, தொல்பொருட்கள் கிடைத்துள்ளன.

இது குறித்து, அறம் வரலாற்று ஆய்வு மைய தலைவர், அறம் கிருஷ்ணன் கூறியதாவது: தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டிற்கு அருகே உள்ள, முத்துராயன் குட்டை, ஊர் குட்டை மலைப்பகுதியில், பழங்கற்கால மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. குறிப்பாக, கறுப்பு - சிவப்பு பானை ஓடுகள், முதுமக்கள் தாழிகளின் உடைந்த பாகங்கள், கல் ஆயுதங்கள், கல் வீடுகள், இரும்பு உருக்கியதற்கான கழிவுகள் கிடைத்துள்ளன. மேலும், இரும்பு கோடரியின் உடைந்த பகுதி, இரும்புக் கழிவுகள் படிந்த பாறைப் பகுதிகள், பாறை ஓவியங்கள் உள்ளிட்டவை, பல ஏக்கர் பரப்பளவில் சிதறிக் கிடக்கின்றன. அவற்றில், இரும்புக்கழிவுகள், கல் ஆயுதங்கள், உடைந்த மண் குடுவைகள், வாழ்விடம் இருந்ததற்கான அடையாளமாக கல் குவியல்கள் ஆகியவை, இப்பகுதியில், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், மனிதன் வாழ்ந்ததற்கான சான்றுகளாக உள்ளன. மலைக்குன்றை சுற்றி, பல இடங்களில், வெண்மை நிற ஓவியங்கள் உள்ளன. அவற்றில், தடிமனான கோட்டோவிய மனிதன், மயில், முக்கோணம், செவ்வக வடிவங்களில் வீட்டின் அடையாளம், கால்நடைகளின் உருவங்கள் உள்ளிட்ட பாறை ஓவியங்கள் உள்ளன. மலைப்பகுதி எங்கும், வரலாற்று தடயங்கள் கிடைப்பதால், அப்பகுதியை, தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: பாலக்காடு வலியபாடம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச உற்சவம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி கூக்கல்தொரை ஸ்ரீ ஜெடைய லிங்க சுவாமி திருக்கோவில் விழா கோலாகலமாக ... மேலும்
 
temple news
கூடலுார்: கூடலுார் ஆமைக்குளம் பாண்டியார் டான்டீ அருள்மிகு சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் பவுர்ணமி பூஜை நடந்தது.நடுவீரப்பட்டு அடுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் என்.ஜி.ஜி.ஓ., நகர், சக்தி விநாயகர் கோவிலில் பெண்கள் பால்குடம் எடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar