கீழக்கரை: அலவாய்க்கரைவாடியில் கருப்பட்டி முனியசாமி, பத்திரகாளியம்மன், முத்து மாரியம்மனுக்கு முளைப்பாரி விழாவை முன்னிட்டு பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்து வழிபாடு செய்தனர். கடந்த ஆக. 1 அன்று காப்புக்கட்டுதல் நடந்தது. பக்தர்கள் பால்குடம், வேல்காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். முளைப்பாரி ஊர்வலம் சென்று கடலில் கரைக்கும் நிகழ்ச்சி நடந்தது.