திருப்புத்தூர் ராஜகாளியம்மன் கோயிலில் நாளை ஆடித்திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஆக 2017 01:08
திருப்புத்துார்:திருப்புத்துார் ராஜகாளியம்மன் கோயிலில் கடைசி ஆடிவெள்ளி நாளை கொண்டாடப்படுகிறது.திருப்புத்துாரில் பரவலாக ஆடி மாதம் முழுவதும் ஆடி விழா கொண்டாடப்படுகிறது.நடுத்தெரு முத்துமாரியம்மன்கோயிலில் 187 வது ஆண்டாக அம்மனுக்கு முளைப்பாரி எடுத்து பாரி விழா,கரக ஆட்டத்துடன் கொண்டாடினர். மேலத்தெரு காளியம்மன் மாரியம்மன் கோயில் பால்குடம் எடுத்து மகிழ்ந்தனர். புதுப்பட்டி முத்துமாரி அம்மனுக்கு முளைப்பாரி,பால்குடம் எடுத்து கொண்டாடினர். நான்கு ரோடு முத்துமாரியம்மன் கோயில் ஆடி விழா பாரி எடுத்து செண்டை மேளம், அன்னதானத்துடன் கொண்டாடினர்.
கீழரத வீதி வீரமாகாளியம்மன் கோயிலில் கூழ் ஊற்றி மது எடுத்து கொண்டாடினர். இதே போன்று நகரின் மேற்கு எல்லைத் தெய்வமான ராஜகாளியம்மன் கோயிலில் ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வந்து விழா எடுத்துச் அம்மனைத் தரிசித்துச் சென்றனர். நாளை ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு காலை 9:௦௦ மணிக்கு பால்குடம், பூக்குழியும், பகலில் அன்னதானமும் நடைபெறுகிறது.மாலையில் பூத்தட்டுக்களுடன் வந்து பக்தர்கள் அம்மனுக்கு பூச்சொரிதல் நடைபெறும்.