பதிவு செய்த நாள்
10
ஆக
2017
01:08
செஞ்சி : காரியமங்கலம் கருணா சாயி பாபா கோவிலில் ராகவேந்திரர் ஆராதனை விழா நடந்தது. செஞ்சி தாலுகா, காரியமங்கலம் கருணாசாயி பாபா கோவிலில் ராகவேந்திரர் ஆராதனை விழா மற்றும் பிருந்தாவனம் மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு காலை 9:30 மணிக்கு கோபூஜையும், 10:30 மணிக்கு மகா கணபதி, லட்சுமி, தன்வந்தரி, சுதர்சன, குபேர, நாராயண ஹோமம் மற்றும் ராகவேந்திரர் அஷ்டோத்ர நாமவலியும் நடந்தது. பகல் 12:00 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், தொடர்ந்து கலச புறப்பாடும், 12:30 மணிக்கு மகா கும்பாபிஷேகமும், மதியம் 1:00 மணிக்கு பிருந்தாவனம் மற்றும் ராகவேந்திரருக்கு கலசாபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. விழாவில், எம்.எல்.ஏ., மஸ்தான், அறங்காவலர் ரகுநாதன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டனர். பாலகணேஷ் குருக்கள் தலைமையிலான குழுவினர், கும்பாபிஷேக பூஜைகளை செய்தனர்.