ஆடி வெள்ளியில் சிந்தலவாடி அம்மனுக்கு வளையல் அலங்காரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஆக 2017 02:08
கிருஷ்ணராயபுரம்: சிந்தலவாடி மாரியம்மன் கோவிலில், ஆடி வெள்ளி முன்னிட்டு அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடு நடந்தது. கிருஷ்ணராயபுரம் சிந்தலவாடி அருகே, பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. ஆடி வெள்ளிக்கிழமை முன்னிட்டு, அம்மனுக்கு நேற்று சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின், மாரியம்மனுக்கு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட வளையல் கொண்டு, சிறப்பு அலங்காரம் செய்து, பூஜை நடந்தது. இதில், லாலாப்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.