குளித்தலை: குளித்தலை அடுத்த திம்மம்பட்டி பஞ்., கணக்கபிள்ளையூர் காமாட்சி அம்மன் கோவில் திருவிழாவையொட்டி, நேற்று காலை, குளித்தலை கடம்பர்கோவில் காவிரி ஆற்றில் இருந்து, பக்தர்கள் தீர்த்தக்குடம் பால் குடம் எடுத்து வந்தனர். சிலர், அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தும் வகையில், உடலில் அலகு குத்தி சென்றனர். பால், தீர்த்தநீர் ஊற்றி சுவாமியை வழிபட்டனர். பால்குடவிழாவில், 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாக் குழு சார்பில், அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.