பதிவு செய்த நாள்
14
ஆக
2017
02:08
நாமக்கல்: ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில், ஆடிப்பூர விழாவில், பக்தர்கள் கஞ்சிக்கலயம், அக்னி சட்டி, முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில், ஆண்டு தோறும், ஆடிப்பூர விழா கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு விழா, நாமக்கல்லில் நடந்தது. உலக சமாதானம், மத நல்லிணக்கம் பெருகவும், பருவமழை பெய்யவும், மக்கள் நலம் பெற்று வாழ்வில் வளம்பெற நடந்த விழாவில், ஏராளமான செவ்வாடை பக்தர்கள் பங்கேற்றனர். நாமக்கல் - மோகனூர் சாலையில் துவங்கிய ஊர்வலத்துக்கு, மாவட்ட ஆன்மிக இயக்க தலைவர் கணேசன் தலைமை வகித்தார். முக்கிய வீதிகளின் வழியாக சென்ற ஊர்வலம், ஆர்.பி.புதூர், பொன்கைலாஷ் கார்டன் குட்டை மேலத்தெரு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தை அடைந்தது. ஏராளமான பக்தர்கள் கஞ்சிக்கலயம், அக்னி சட்டி, முளைப்பாரி எடுத்துச் சென்றனர். தொடர்ந்து கஞ்சி வார்த்தல், தீபாராதனை நடந்தது. பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
* குமாரபாளையத்தில், திருவள்ளுவர் நகர், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் சார்பில், ஆடிப்பூர விழாவில், 1,008 கஞ்சிக் கலய ஊர்வலம் மற்றும் பாலாபிஷேக விழா நடந்தது.