பதிவு செய்த நாள்
14
ஆக
2017
02:08
நாமக்கல்: கொசவம்பட்டி, மாரியம்மன் கோவில் திருவிழா துவங்கியது. நாமக்கல், கொசவம்பட்டி, கவரா நகர் மகா மாரியம்மன் கோவில் திருவிழா, நேற்று, கம்பம் நடுதலுடன் துவங்கியது. மோகனூர் காவிரி ஆற்றில் இருந்து, பக்தர்கள் தீர்த்தக்குடங்களுடன், ஊர்வலமாக கொசவம்பட்டிக்கு சென்றனர். மதியம், பொங்கல் வைத்து வழிபாடு நடந்தது. இரவு, கம்பம் நடப்பட்டு, காப்பு கட்டப்பட்டது. இன்று இரவு, 7:00 மணிக்கு கிராம பூஜை நடக்கிறது. வரும், 20 இரவு, 8:00 மணிக்கு மாவிளக்கு எடுத்தல் நடக்கிறது. ஆக., 21 அதிகாலை, 1:00 மணிக்கு அம்மன் குதிரை வாகனத்தில் வலம் வருதல், காலை, 4:00 மணிக்கு பெண்கள் அங்கபிரதட்சணம் செய்தல், மாலை, 4:00 மணிக்கு அலகு குத்தல், அக்னி சட்டி எடுத்தல், பூக்குழி இறங்குதல் உள்ளிட்டவை நடக்கின்றன. ஆக., 22 காலை, 10:00 மணிக்கு கிடா வெட்டுதல், மாலை, 5:00 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் பவனி வருதல், 6:00 மணிக்கு கிராம பூஜை செய்து கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை ஊர் மக்கள், விழா குழுவினர் செய்துள்ளனர்.