பதிவு செய்த நாள்
28
நவ
2011
12:11
ஊட்டி:ஊட்டி நகர விநாயகர் சதுர்த்தி விழாக்குழு பொறுப்பாளர்கள் கூட்டம், ஊட்டியில் நடந்தது. விழாக்குழு தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சண்முகம், ஜெகன், வாசுதேவன் முன்னிலை வகித்தனர். ஊட்டி எல்க்ஹில் பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், 30ம் தேதி நடக்கும் கும்பாபிஷேக விழாவுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு, விநாயகர் சதுர்த்தி விழாக்குழு சார்பில், பழநி தேவஸ்தான விபூதி மற்றும் பஞ்சாமிர்தம் வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. பக்தர்களுக்காக போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. துணைத் தலைவர்கள் ஆனந்தகுமார், விஜய், பாபு, முரளி, ஆனந்தகுமார், கார்த்திக், ராஜேந்திரன் பங்கேற்றனர். விழா ஒருங்கிணைப்பாளர் மஞ்சுநாத் நன்றி கூறினார்.