கண்ணன் மூன்று வயது வரை கோகுலத்திலும், மூன்றிலிருந்து ஏழு வயது வரை பிருந்தாவனத்திலும், எட்டு முதல் பத்து வயது வரை மதுராவிலும் வாழ்ந்தார். மதுராவில் அருளும் கிருஷ்ணரை வழிபட்டால் எல்லா துன்பங்களும் ஓடிவிடும் என்பது நம்பிக்கை. மதுராவில் வசுதேவர் தேவகிக்கு எட்டாவது மகனாகச் சிறையில் அவதரித்தவர் கிருஷ்ணர் அந்தச் சிறை இப்போது கத்ர கேஷப்தேவ் என்ற பெயரில் கோயிலாக எழுந்துள்ளது. துவாரகையில் குடிகொண்டிருக்கும் கிருஷ்ணருக்குத் துவாரகீசன் என்று பெயர். இங்கு இவர் பள்ளி கொண்ட நிலையில் காட்சி தருகிறார். ஜகத் மந்திர் என்று சொல்லப்படும் துவாரகை கோயிலில் பிரதான வாசலின் பெயர் சொர்க்க துவாரம். இது எப்போதும் திறந்தேதான் இருக்கும். இதைத் தாண்டிச் சென்றால்தான் மோட்ச துவாரம் காட்சி தரும். அதையும் தாண்டிச் சென்றால்தான் கிருஷ்ணனைத் தரிசிக்கலாம்.