Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 ... மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) - எதிர்பாராத வருமானம் மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, ...
முதல் பக்கம் » புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206)
ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) - கையில் பணப்புழக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) - கையில் பணப்புழக்கம்

பதிவு செய்த நாள்

17 ஆக
2017
09:08

செவ்வாயை நட்பு கிரகமாக கொண்ட ரிஷப ராசி அன்பர்களே!

செவ்வாய் இந்த மாதம் ஆக. 28- வரை உங்களுக்கு சாதகமாக 3-ம் இடத்தில்
இருப்பதால் பக்தி உயர்வு மேம்படும். முயற்சி அனைத்திலும் வெற்றி உண்டாகும்.          
பொருளாதார வளம் மேம்படும். அதன் பின் அவரால் நற்பலனை கொடுக்க முடியாது. புதன் செப். 2- வரை சாதகமற்ற நிலையில் இருப்பதால் பகைவரால் இடையூறு வரலாம். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. அதன் பிறகு 4-ம் இடத்தில் இருந்து நற்பலன் அளிப்பார். பொன், பொருள் சேரும். குடும்பத்தில்  அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும். சுக்கிரன், ராகு மாதம் முழுவதும் நன்மையை வாரி வழங்குவர்.

குருபகவான் உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் இருப்பதால் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும்.  பிள்ளைகளின் செயல்பாட்டால் பெருமை கிடைக்கும். பெண்களால் வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள். இந்நிலையில் செப். 2-ல் குரு பகவான் உங்கள் ராசிக்கு 6-ம் இடத்திற்கு அடியெடுத்து வைக்கிறார். இது சாதகமான நிலை என்று சொல்ல முடியாது.
உடல் நலத்தை பாதிப்புக்குள்ளாக்குவார். மனதில் தளர்ச்சியை ஏற்படுத்துவார். குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது 9-ம் இடத்து பார்வை சாதகமாக இருக்கிறது. குருவின் பார்வை மூலம்  இடையூறு நீங்கும்.சுக்கிரனால் கையில் பணப்புழக்கம்
அதிகரிக்கும்.  சமூகத்தில் மதிப்பு கூடும். ஆக. 21-க்கு பிறகு பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர்வர். புதுமணத் தம்பதிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள்.  ஆக.17, செப். 12,13- ல் பெண்கள் உதவிகரமாக
இருப்பர்.  அடிக்கடி விருந்து, விழா என சென்று வருவீர்கள்.  செப். 7,8,9- ல் உறவினர்கள்
வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். அதே நேரம் ஆக. 22,23-ல் அவர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருப்பது நல்லது.  செப்.1- க்கு பிறகு புதனால் நற்பலன் உண்டாகும். கணவன், -மனைவி இடையே அன்பு மேம்படும். சூரியனால் உடல் நலம் பாதிக்கப்படலாம்.

ஆக. 28-க்கு பிறகு பயணத்தின் போது சற்று கவனம் தேவை. ஆக. 24,25, செப். 3,4- ல் பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை ஏற்படலாம்.

தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சுக்கிரனால் அரசின் சலுகை கிடைக்கும். வங்கி கடன் எளிதாக கிடைக்கும். செப். 5,6- ல் எதிர்பாராத பணவரவு வரும். ஆக. 18,19,செப். 10,11,14,15ல் சந்திரனால் முயற்சியில் தடை, பொருள் விரயம் உருவாகலாம். ஆக. 26, 27,28ல் பகைவர்களை வெல்லும் ஆற்றல் உண்டாகும்.

பணியாளர்கள் சிறப்பான முன்னேற்றம் காண்பர். கோரிக்கைகளை ஆக.28-க்குள் கேட்டு பெற்றுக் கொள்ளவும். செப். 2-க்கு பிறகு அரசு ஊழியர்களுக்கு திறமைக்கு ஏற்ப கவுரவம் கிடைக்கும். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் நற்பலன் காணலாம். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். அதிகாரிகளின் ஆதரவால் கோரிக்கை நிறைவேறும். செப். 5,6- ல் எதிர்பாராத நன்மை கிடைக்கும்.

கலைஞர்கள்- புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். அரசிடம் இருந்து விருது, பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகள் எதிர்பார்த்த நன்மை கிடைக்கப் பெறுவர். ஆக.28க்கு பிறகு முயற்சியில் தடை, மனச்சோர்வுக்கு ஆளாகலாம்.

மாணவர்கள் பிற்போக்கான நிலையில் இருந்து செப். 1-க்கு பிறகு விடுபடுவர். புதனால்
போட்டிகளில் பரிசு கிடைக்கப் பெறுவர்.   

விவசாயிகள் கால்நடை வளர்ப்பின் மூலம் எதிர்பார்த்த லாபம் கிடைக்கப் பெறுவர். காய்கறிகள்,பழங்கள், கீரைவகையில் நல்ல வருவாய் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் ஆக. 28-க்குள் கைகூடும்.  

பெண்கள்- குடும்பத்தாரின் நன்மதிப்பை பெறுவர். ஆக.20, 21, செப். 16-ல்  புத்தாடை, அணிகலன்கள் வாங்க வாய்ப்புண்டு. பெற்றோர் வீட்டில் இருந்து சீதனம் வரப் பெறலாம். ஆக. 29,30-ல் விருந்து, விழா என சென்று வருவீர்கள்.  செப். 2- க்கு பிறகு வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். சுய தொழில் செய்து வரும் பெண்கள் வங்கி கடன் மூலம் தொழிலை விரிவுபடுத்துவர்.  

நல்ல நாள்: ஆக. 17, 20, 21, 26, 27, 28, 29, 30,
செப். 4, 5, 7, 8, 9, 12, 13, 16
கவன நாள்:  ஆக.31,   செப்.1, 2  சந்திராஷ்டமம்.
அதிர்ஷ்ட எண்:  5, 6         
நிறம்: வெள்ளை, நீலம்

பரிகாரம்
* சங்கடஹர சதுர்த்தியன்று  விநாயகர் வழிபாடு
* சனிக்கிழமையில் ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை
* பிரதோஷத்தன்று நந்தீஸ்வரருக்கு நெய் தீபம்

பகிர்க copied
 
மேலும் புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206) »
temple news
அசுவினி: நேர்மையாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதமாகும். கேது பூர்வ ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: எப்போதும் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: எடுத்த முடிவில் உறுதியாக இருந்து நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: கனிவான குணமும் பிறருக்கு உதவி செய்யும் மனமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஒவ்வொன்றையும் அனுபவத்தின் வழியாக கற்று முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar