மாரியம்மன் கோவிலில் ஆடு, கோழி பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஆக 2017 01:08
கொளத்துார்: கோட்டையூர் மாரியம்மன் கோவிலில், ஆடு, கோழிகளை பலியிட்டு, பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். கொளத்துார், கோட்டையூர் மாரியம்மன் கோவில் பண்டிகை நடத்துவது தொடர்பாக, இரு தரப்பினர் இடையே மோதல் நீடித்தது. சப் - கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் நடந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு, நேற்று முன்தினம், கோவில் பண்டிகை தொடங்கியது. நேற்று காலை, கொளத்துார் மற்றும் தர்மபுரி மாவட்டம், கர்நாடகா எல்லைப்பகுதி கிராம மக்கள் பலர், கோவில் முன்புறம் ஆடு, கோழிகளை பலியிட்டு, நேர்த்திக்கடன் செலுத்தினர்.