பதிவு செய்த நாள்
18
ஆக
2017
01:08
செஞ்சி: செஞ்சி பி. ஏரி சுப்பிரமணியர் கோவிலில் ஆடி கிருத்திகை உற்சவம் நடந்தது. செஞ்சி பி. ஏரிக்கரை சுப்பிரமணியர் கோவிலில், ஒழுங்குமுறை விற்பனை கூட நெல், அரிசி, மணிலா வியாபாரிகள் மற்றும் எடை பணி தொழிலாளர்கள் சார்பில், ஆடி கிருத்திகை விழா நேற்று நடந்தது. இதை முன்னிட்டு மாரியம்மன் கோவிலில் இருந்து பால் குடம் ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து அக்னி சட்டி ஊர்வலமும், சக்திவேலுக்கு 108 திரவியங்களால் அபிஷேகமும் நடந்தது. பிற்பகல் 2:00 மணிக்கு பக்தர்களுக்கு மிளகாய் அபிஷேகம், மாலை 4:00 மணிக்கு செடல் போட்டு, பூஜை செய்தனர். தொடர்ந்து பக்தர் கள் தீமிதித்தனர். மாலை 5.20 மணிக்கு செடல் அணிந்த பக்தர்கள் லாரி, வேன், ஆட்டோ, கார், பொக்லைன் உள்ளிட்ட வாகனங்களை தேராக இழுத்து வந்தனர். விழா ஏற்பாடுகளை கமலக்கன்னியம்மன் கோவில் அறங்காவலர் அரங்கஏழுமலை, சுப்பிரமணியர் கோவில் நிர்வாகிகள் சிவக்குமார், மதியழகன், நெல் அரிசி வியாபாரிகள் சங்க தலைவர் குமரேசன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.