மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டில் உலக நன்மை வேண்டி கஞ்சி கலய ஊர்வலம் நடந்தது. பொருவளூர் ஆதிபராசக்தி சக்தி பீடத்தின் சார்பில் ஆடிப்பூர கஞ்சி கலயம் ஊர்வலம் நடந்தது. இதையொட்டி, அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து மாலையில், கஞ்சி கலய ஊர்வலம் நடந்தது. அங்காளம்மன் கோவிலிருந்து துவங்கிய ஊர்வலம், முக்கிய வீதிகள் வழியாக வந்து, சக்தி பீடத்தை சென்றுடைந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்துக் கொண்டனர்.