Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மணமை சிவலோகநாதர் கோவிலில் பாம்பு ... குழந்தை வரம் தரும் போடி பத்திரகாளியம்மன் குழந்தை வரம் தரும் போடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேண்டுதலை நிறைவேற்றும் பாம்பாலம்மன் கோயில்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வேண்டுதலை நிறைவேற்றும் பாம்பாலம்மன் கோயில்

பதிவு செய்த நாள்

19 ஆக
2017
11:08

வடமதுரை:  வடமதுரை அருகே வெள்ளபொம்மன்பட்டியில் ‘பாம்பாலம்மன்’ கோயில் உள்ளது. நுாறு ஆண்டுகளுக்கு முன் புற்று அருகில் கிடந்த கற்சிலையை வணங்க துவங்கிய மக்கள், தற்போது அங்கு ஆண்டுதோறும் 3 நாள் திருவிழா நடத்தும் அளவு கோயிலாக மாற்றியுள்ளனர்.

வெள்ளபொம்மன்பட்டியில் வடமதுரை ரோட்டில் அமைந்துள்ள இக்கோயில் பூசாரி பி.செல்வம் கூறியதாவது: நுாறாண்டுக்கு முன் முழுக்க முழுக்க விவசாயம், அதனை சார்ந்த கால்நடை வளர்ப்பே இங்கு முக்கிய தொழிலாக இருந்தது. அப்போது ஆடு, மாடுகள் மேய்ச்சலுக்குச் சென்றால் தானாகவே வீடு திரும்பும் வகையில் அதனை வளர்ப்பர். இவ்வாறு செல்லும் ஆடுகள் காணாமல் போனால், இங்குள்ள புற்று சிலை முன்பாக வேண்டுதல் வைப்பர். அதன்பின் ஆடு, மாடுகள் வீடு திரும்பியதாக நம்பிக்கை, ஐதீகம் உள்ளது. இதன் பின்னரே மக்கள் அம்மனை வழிபட ஆர்வம் காட்டினர் எனச் செவிவழிச் செய்திகள் கூறுகின்றன.  பாம்புகளால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, குழந்தை வரம் கிடைக்க, தொழில் வளம் சிறக்க என பல வேண்டுதல்களை வைக்கின்றனர். வேண்டுதல் நிறைவேறிய பின் வசதி படைத்த பக்தர்கள் தங்கள் பங்களிப்பை கோயிலுக்கு வழங்கினர்.

இதனால் சிறிய திட்டுபோல இருந்த கோயில் பதினைந்து ஆண்டுகளில் கட்டட வசதி கொண்ட ஒரு நடுத்தர கோயிலாக மாறிவிட்டது. நேர்த்திக்கடன் நிறைவேறிய பக்தர்கள், ஆடு, மாடு, குழந்தை மட்டுமின்றி, மினிபஸ், பாம்பு, ஆட்டோ, கார் என பல வகை பொம்மைகளை செய்து திருவிழாவில் ஊர்வலமாக கொண்டு வந்து கோயிலில் வைக்கின்றனர். இந்துக்கள் மட்டுமின்றி, பிற மதங்களை சார்ந்தவர்களும் வேண்டுதல் வழிபாடு செய்வது இக்கோயிலின் சிறப்பாகும், என்றார். கோயில் குறித்து விபரம் அறிய 97878 84298ல் அழைக்கலாம்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
நவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை போலவும், பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை அனுஷ்டிக்க ... மேலும்
 
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: பாளையங்கோட்டை அம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar